மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க மாதம் ஒருமுறை பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.
அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் பொதுதேர்வு குறித்த அறிவிப்புகளும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், புதிய பாடதிட்டம் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்ரவரியில் வெளியாகும் புதிய பாடத்திட்டம் வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு மேலாகவும் நாடே வியக்கும் வகையில் இருக்கும் எனவும் தமிழத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்களுக்காக குழு அமைக்கப்பட்டு பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.