சைனிக் பள்ளி ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புமாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. தேசிய அளவில், பல்வேறு மாநிலங்களில், 25 சைனிக் பள்ளிகள் உள்ளன.
தமிழகத்தில், உடுமலை அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. சைனிக் பள்ளியில், 2018-19ம் ஆண்டுக்கான, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு தேசிய அளவில் நேற்று நடந்தது.

தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளியில் சேர, சென்னையில் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி மற்றும் லுார்துமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்தது.தேர்வுகள் நேற்று காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடந்தது. தமிழகத்தில் மொத்தம், 886 மாணவர்கள்ஆறாம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வும், 543 மாணவர்கள், ஒன்பதாம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வும் எழுதினர்