இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் - லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
உலகளாவிய ரீதியில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்களில் ஒன்றான பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும்.
இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் - லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


லைஃபை (LiFi)
இன்டர்நெட் ஆப் திங்ஸ்தனை பின்பற்றும்மொரு நிறுவனமான பிலிப்ஸ், இந்த லைஃபை தொழில்நுட்பத்தை கூடிய விரைவில் பாரிய அளவில் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதக்கில்லை. வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் இரு வழி மற்றும் அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பமாகும். ஆனால் டேட்டா பரிமாற்றத்திற்கு, ரேடியோ அலைகளுக்கு பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்துகிறது, அவ்வளவு தான் வித்தியாசம்.

30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட்.!
பிலிப்ஸ் நிறுவனத்தின்படி, இந்த லைஃபை தொழில்நுட்பமானது, ஏற்கனவே அதன் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வகை விளக்குகள் ஆனது ஒளியின் தரத்தில் எந்தவிதமான சமரசமின்றி, சுமார் 30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட் இணைப்பையும் வழங்கிவருகிறது.

சாத்தியமான தொழில்நுட்பம்.!
30எம்பிபிஎஸ் அளவிலான வேகமென்பது ஒரு பெரிய வேகமாக இல்லாவிட்டாலும் கூட, இதுவே பெரும்பாலான இணையம் சார்ந்த வேலைகளை முடிக்க நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்பது வெளிப்படை. அலுவலகங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த லைஃபை தொழில்நுட்பமானது, எதிர்கால வாடிக்கையாளர்களுக்கான சாத்தியமான தொழில்நுட்பங்களில் ஒன்றென்பதிலும் ஐயமில்லை.

சரியான தேர்வாகும்.!
ரேடியோ அதிர்வெண்களானது (radio frequencies) நெருக்கமாகி கொண்டே வருகின்ற நிலைபாட்டில், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற சிந்தனைகளுக்கு, ஒரு பெரிய அலைவரிசை கொண்ட ஒளி நிறமாலை (light spectrum) போன்ற தொழில்நுட்பம் தான் சரியான தேர்வாகும் அல்லது ஆதாரமாகும்.