சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 7 பேர் குழு அமைத்து ஆய்வுசெய்ய இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது