சென்னை: ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய போராட்டம் நடத்திய நிலையில் நேரிலும், தபாலிலும், omc_2018@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மனுக்களை அளிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது