சென்னை: தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்காக 3,145 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1,2,9,11 வகுப்புகளுக்கு புதிய பாட திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும்.

ஜூன் 1 முதல் 15 வரை புதிய பாட திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் தொடர்பாக புகார் இருந்தால், புகார் அளிக்கலாம். கட்டணம் குறித்த விவரத்தை வைக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளம்பரம் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.