சென்னை: பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவிகள், தாங்கள் சேர்ந்து படிக்க விரும்பும் பொறியியல் கல்லூரிகளின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது.
www.tnea.ac.in இணையதளத்தில், பொறியியல் கல்லூரிகளின் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவ, மாணவிகள், தாங்கள் பெற்றிருக்கும் கட்-ஆப் மதிப்பெண்ணையும், தேர்வு செய்ய உள்ள கல்லூரியின் கட்-ஆப் மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்து, இடம் கிடைக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.
அதாவது, அண்ணா பல்கலை அளித்துள்ள இந்த லிங்கில் சென்று மினிமம் கட் ஆப் என்ற சேவையை கிளிக் செய்து, அதில் கட் ஆப் மதிப்பெண்ணை சோதனை செய்யலாம். அதாவது ஒரு மாணவரின் கட்-ஆப் 180 என்றால், அவர் விரும்பும் கல்லூரியின் கட் -ஆப் 175 முதல் 185 வரை என்று இருந்தால், அவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று நம்பலாம்.