பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரசின் தேர்வுத்துறை வழியாக, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ் 2 தேர்வில், 8.66 லட்சம் பேர் உட்பட, பொதுத்தேர்வுகளில், 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 11ல் துவங்கியது. 79 மையங்களில் நடந்த விடைத்தாள் திருத்த பணியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.திருத்தப்பட்ட விடைத்தாள்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த தேர்வு மையத்தில் இருந்து, கணினி வழியாக தேர்வுத்துறை இணையத்தில், பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது.விடை திருத்த மையத்தில் இருந்து வரும், பாட வாரியான மதிப்பெண் அறிக்கையை, தேர்வுத்துறையினர் பெற்று, அவற்றை தகவல் தொகுப்பு மையத்தில், மதிப்பெண் பட்டியலாக தயார் செய்யும் பணி, நேற்று துவங்கியது.இந்த பணி, 9ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என, தெரிகிறது. மதிப்பெண் பட்டியல் இறுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, மே, 16ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்