போலி செய்தியை அடையாளம் காண வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தகவல் பரிமாற்றத்திற்காக அதிகம்பயன்படுத்தப்படும் ஆப் வாட்ஸ்ஆப் தான்.
இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆப்ஸ் மூலம் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி போலியான செய்திகளையும், தேவை இல்லாத விளம்பரங்களையும், சில ஆபாசவீடியோக்கள் மற்றும் மதவாதத்தை தூண்டும் செய்தியையும் போலியாக பரப்பி அதன் மூலம் மக்களிடேயே குழப்பதையும் ஒரு விதமான தவறுதலான புரிதலையும் கொடுக்கிறது
ஃபார்வேர்டட்
இந்த பிரச்னையை சமாளிக்க வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. நாம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பகிரும் போது, அதில் ‘ஃபார்வேர்டட்’ என்று அடையாளம் குறிப்பிடப்பட்டிருக்கும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும்.


இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பி , அதன் மொஓல் ஒரு சர்ச்சை என்றால், அதனை யார் அனுப்பினார்கள் என்பதை மிக எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும்.
இந்த வசதியினை பெற உடனே 2.18.179 என்ற புதிய வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் தேவை இல்லாத மெசேஜ் நமக்கு வருவது தவிர்க்க முடியும்


மேலும் யாரோ ஒருவரின் எழுத்துகளை அல்லது உண்மை செய்திகளை திருடி தான் எழுதியது போலவே காண்பிக்க முடியாது.
அவ்வாறு செய்தால், அந்த செய்திக்கு சொந்தக்காரர் யார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும் அதில் ‘ஃபார்வேடட்’ என்று குறியீடு காட்டிக் கொடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.