இண்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய முறையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இண்டர்நெட் இல்லாத நேரங்களின்போது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன், இண்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்களின் வசதிக்கேற்ப பலநிறுவனங்களும், இணையம் மற்றும் போனில் சிறப்பு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இண்டர்நெட் பயன்படுத்துவோர், நெட் இல்லாமலேயே க்ரோம்
பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.
பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.
பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான செய்தி மற்றும் தகவல்களை இண்டர்நெட், வைஃபை இருக்கும்போது டவுன்லோடு செய்து கொண்டு, அதன் பிறகு ஆஃப்லைனில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பயண நேரங்களின்போதும், இண்டர்நெட் இல்லாததபோதும் மிகவும் வசதியாக அமையும்.
விருப்பங்கள், செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கூகுளே தானாக டவுன்லோடு செய்து தரும். தற்போது இந்த வசதி நைஜீரியா, பிரோசில், இந்தியா போன்ற100 நாடுகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..