அஹமதாபாத்: அஹமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் ஒவ்வொரு வருடமும் சில புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படும். ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு பெயர் வைக்கப்படும். ஆனால் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் உயர்ந்து இருந்தாலும் புதிய கிரக கண்டுபிடிப்புகளில் பெரிதாக ஈடுபடவில்லை.
இந்தநிலையில் இந்தியா முதல்முறையாக புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அஹமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்றை பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் இயங்கும், பிஆர்எல் என்ற குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.
இந்த புதிய கிரகம் EPIC 211945201 என்று சூரிய குடும்பத்தில் உள்ளது. இந்த சூரிய குடும்பத்தில் இந்த கிரகம் மட்டுமே உள்ளது. இந்த கிரகத்திற்கு EPIC 211945201b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
பார்க்க பூமி போல இருந்தாலும் பூமியிற் விட 10 மடங்கு எடை அதிகமாக உள்ளது. இதை சுற்றி 600 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு உயிரினம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.