புதுச்சேரி : அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் துளசி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில், எதிர்பார்த்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் இல்லாத நிலையில், கல்வித்துறை செயலர் தலைமையில் தேர்வு முடிவு குறித்து கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி துணை முதல்வர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.அதில் அரசு பள்ளிகளில் காலியாகும் பதவிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நிரப்படுவதில்லை என கூறப்பட்டது. வரும் கல்வியாண்டிற்கான விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர்.விரிவுரையாளர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பிய பின், காலி இடங்களில் நேரடி நியமனம் செய்ய வேண்டும்