பிளிப்கார்ட் நிறுவனம் தனது புதிய வலைத்தளம் www.2gud.com ஐ அறிமுகம் செய்துள்ளது. புதுப்பித்த பொருட்களுக்கான பிரத்தியேக வலைத்தளம் இது. ரீபர்பிஷ்டு(Refurbished) பொருட்களை வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு இந்த வலைத்தளத்தை பிளிப்கார்ட் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த வலைத்தளத்தில் பயன்படுத்தப்படாத மற்றும் திருப்பிக் கொடுக்கப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் குறைந்த காலம் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் என்று தனித் தனி பிரிவுகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பிக் கொடுக்கப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் குறைந்த காலம் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களை எப்படி நம்பி வாங்குவது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும். கவலை வேண்டாம் பிளிப்கார்ட் நிறுவனம் தலை சிறந்த வல்லுநர்கள் மூலம் பலதரப்பட்ட சோதனை முறைப்படி, சோதித்து சான்றிதழ் வழங்கப்படும் போன்களை மட்டுமே விற்பனைக்கு வழங்குகிறது.

எப்1 இன்போ சொலுஷன் என்ற முன்னணி சர்வீஸ் சென்டர் மூலம் போன்களை சோதித்து மாற்ற வேண்டிய பாகங்களை மாற்றுவித்து குவாலிட்டி செக் செய்த பின்பு தரத்திற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ற விலையில் விற்பனைக்கு வழங்குகிறது.

இந்திய முழுதும் 140 சேவை மையங்களுடன் இயங்கும் இந்த எப்1 இன்போ சொலுஷன் சர்வீஸ் சென்டர், விற்பனைக்கு வழங்கும் அனைத்து மொபைல் போன்களுக்கும் நம்பிக்கை சான்றிதழ் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்குகிறது. இத்துடன் 3 முதல் 12 மாதம் வரை வாரண்ட்டி வழங்குகிறது மற்றும் 10 நாள் ரிட்டன் பாலிசியும் வழங்குகிறது.

வரும் நாட்களில் மொபைல் போன்கள் மட்டும் இல்லாமல் டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை, 400 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விற்பனை செய்யுமென்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் சிறந்த ரீபர்பிஷ்டு போன்கள் வாங்க www.2gud.com செல்லுங்கள்