நேதாஜி
ஒருவரது பிறப்பால்
ஒரு தேசம்
பெருமைகொள்ளும் என்றால்
அப்பிறப்பின் சொந்தக்காரர்..
வசதியான குடும்பத்தில் பிறந்தாலும்
வளமையான வாழ்க்கையை விரும்பாமல்
துறவறம் விரும்பிய தூய்மையானவர்..
அடிமையாய் இருப்பதைத் தவிர
இந்தியர்களுக்கு வேறு என்ன தெரியும்?
கேட்டது ஆங்கிலேய பேராசிரியர் ஓட்டன்..
அப்படிக் கேட்டவரை அன்று மாலையே அடிக்கத் தெரியும்.
அடித்தது சுபாஷ் சந்திரபோஸ்.
அடித்தது தவறு
காரணம் கேட்காமல்
காரணம் சொல்லி நீக்கியது கல்லூரி நிர்வாகம்..
மன்னிப்பு கேட்டால்
முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் ..சொல்லி அனுப்பியது கல்லூரி..
மண்டியிட்டு
அடிமைத்தனத்தை
பயில்வதைவிட பயிலாமை நன்று.
சொல்லாமல் விட்டார்
மன்னிப்பையும், மறுபதிலையும்...
உன் செயலுக்காக
வருத்தப்படுகிறாயா?
கேட்டது தந்தை ஜானகிநாத்..
ஒருபொழுதும் இல்லை
உறுதியாய்ச் சொன்னார் போஸ்..
பெருமையோடு பார்த்தார் தந்தை..
ஒரு கல்லூரி மறுத்ததை
மறு கல்லூரி கொடுத்தது..
கிடைத்த வாய்ப்பில்
படித்தார்.நல்லபடியே
முடித்தார்..
நீ
ஐ.சி.எஸ் படிக்க வேண்டும்.
இது எனது ஆசை
சொன்னார் தந்தை..
தந்தையின் ஆசையை
நிறைவேற்ற இலண்டன் சென்றார்..
அத்தனை எளிதல்ல
ஐ.சி.எஸ்..
எல்லாம் வேறு மொழி. இருந்தும் வேறு வழி..
முயற்சி கொண்டு படித்தார்-என்றைக்கு
தோற்றது முயற்சி?
ஐ.சி.எஸ் படிப்பில்
அவ்வருடப்பிரிவில்
நான்காம் நிலையில் தேர்வு பெற்று,
எங்கே தேறப்போகிறான் என்றவர்களை வாய்மூட வைத்தார்.
இலண்டன் செல்லும்வரை பெரிதாய் அறியவில்லை, சுதந்திரம் பற்றி..
ஆனால்
வந்திறங்கிய நாள்முதல்
சுதந்திரம் என்றால் என்ன?சொல்லிக்கொடுத்தது இலண்டன்..
இத்தனை சுதந்திரம் இங்கிருக்கும்பொழுது
என் மக்களுக்கு மட்டும்
ஏன் இந்த நிலைமை?
உள்ளம் கொதித்தார்?
விறுவிறுவென சென்றார்.
ஆங்கிலேய அதிகாரி மாண்டேகுவின் அறைக்குச் சென்று பிடியுங்கள், பின் படியுங்கள் என ஒரு கடிதம் கொடுத்தார்.
பணி கேட்டுப்
பரிந்துரை போலும்
இளக்காரப் பார்வையோடு
கடிதம் பிரித்த மாண்டேகு
விழிவிரிய போஸை நோக்கினார்.
ஏன் இந்த ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்கிறாய்?
மாண்டேகுவின் கேள்வி.
தாய்நாட்டை
அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாட்டிடம்
அடிபணிந்து பணிபுரிய
தன்மானம் இடம்தரவில்லை..
போஸின் பதில்..
நன்கு யோசித்து முடிவெடு.
இறுதியாய் சொன்னார் மாண்டேகு..
யோசிப்பதற்கு ஒன்றுமில்லை
உறுதியாய் சொன்னார் போஸ்..
தாய்நாடு திரும்பியதும்
காந்தியைத் தேடினார்..
தேடலில் முடிவில்
நேரிலே சந்தித்தார்..
தேசத்திற்காக
ஐ.சி.எஸ் பட்டம் துறந்து
வந்த இளைஞனைப் பார்த்து கேட்டார்..
சுதந்திரத்திற்காக உன்னால் என்ன செய்யமுடியும்?
என்னவெல்லாம் முடியுமோ? அது அத்தனையும் என்றார் போஸ்..
உனக்கான நபர் ஒருவர் இருக்கிறார்.
சென்று பார் என சி.ஆர்.தாஸிடம் அனுப்பினார் காந்தி.
பார்வர்ட் பத்திரிக்கைக்கு ஆசிரியரானார் போஸ்..
பத்திரிக்கையின் மூலம்
இளைஞர்களை ஈர்த்தார்.
ஒருவரது பிறப்பால்
ஒரு தேசம்
பெருமைகொள்ளும் என்றால்
அப்பிறப்பின் சொந்தக்காரர்..
வசதியான குடும்பத்தில் பிறந்தாலும்
வளமையான வாழ்க்கையை விரும்பாமல்
துறவறம் விரும்பிய தூய்மையானவர்..
அடிமையாய் இருப்பதைத் தவிர
இந்தியர்களுக்கு வேறு என்ன தெரியும்?
கேட்டது ஆங்கிலேய பேராசிரியர் ஓட்டன்..
அப்படிக் கேட்டவரை அன்று மாலையே அடிக்கத் தெரியும்.
அடித்தது சுபாஷ் சந்திரபோஸ்.
அடித்தது தவறு
காரணம் கேட்காமல்
காரணம் சொல்லி நீக்கியது கல்லூரி நிர்வாகம்..
மன்னிப்பு கேட்டால்
முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் ..சொல்லி அனுப்பியது கல்லூரி..
மண்டியிட்டு
அடிமைத்தனத்தை
பயில்வதைவிட பயிலாமை நன்று.
சொல்லாமல் விட்டார்
மன்னிப்பையும், மறுபதிலையும்...
உன் செயலுக்காக
வருத்தப்படுகிறாயா?
கேட்டது தந்தை ஜானகிநாத்..
ஒருபொழுதும் இல்லை
உறுதியாய்ச் சொன்னார் போஸ்..
பெருமையோடு பார்த்தார் தந்தை..
ஒரு கல்லூரி மறுத்ததை
மறு கல்லூரி கொடுத்தது..
கிடைத்த வாய்ப்பில்
படித்தார்.நல்லபடியே
முடித்தார்..
நீ
ஐ.சி.எஸ் படிக்க வேண்டும்.
இது எனது ஆசை
சொன்னார் தந்தை..
தந்தையின் ஆசையை
நிறைவேற்ற இலண்டன் சென்றார்..
அத்தனை எளிதல்ல
ஐ.சி.எஸ்..எல்லாம்
வேறு மொழி- இருந்தும்
வேறு வழி..
முயற்சி கொண்டு படித்தார்..என்றைக்கு
தோற்றது முயற்சி..
ஐ.சி.எஸ் படிப்பில்
அவ்வருடப்பிரிவில்
நான்காம் நிலையில் தேர்வு பெற்று,
எங்கே தேறப்போகிறான் என்றவர்களை வாய்மூட வைத்தார்.
இலண்டன் செல்லும்வரை பெரிதாய் அறியவில்லை, சுதந்திரம் பற்றி..
ஆனால்
வந்திறங்கிய நாள்முதல்
சுதந்திரம் என்றால் என்ன?சொல்லிக்கொடுத்தது இலண்டன்..
இத்தனை சுதந்திரம் இங்கிருக்கும்பொழுது
என் மக்களுக்கு மட்டும்
ஏன் இந்த நிலைமை?
உள்ளம் கொதித்தார்?
விறுவிறுவென சென்றார்.
ஆங்கிலேய அதிகாரி மாண்டேகுவின் அறைக்குச் சென்று பிடியுங்கள், பின் படியுங்கள் என ஒரு கடிதம் கொடுத்தார்.
பணி கேட்டுப்
பரிந்துரை போலும்
இளக்காரப் பார்வையோடு
கடிதம் பிரித்த மாண்டேகு
விழிவிரிய போஸை நோக்கினார்.
ஏன் இந்த ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்கிறாய்?
மாண்டேகுவின் கேள்வி.
தாய்நாட்டை
அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாட்டிடம்
அடிபணிந்து பணிபுரிய
தன்மானம் இடம்தரவில்லை..
போஸின் பதில்..
நன்கு யோசித்து முடிவெடு.
இறுதியாய் சொன்னார் மாண்டேகு..
யோசிப்பதற்கு ஒன்றுமில்லை
உறுதியாய் சொன்னார் போஸ்..
தாய்நாடு திரும்பியதும்
காந்தியைத் தேடினார்..
தேடலில் முடிவில்
நேரிலே சந்தித்தார்..
தேசத்திற்காக
ஐ.சி.எஸ் பட்டம் துறந்து
வந்த இளைஞனைப் பார்த்து கேட்டார்..
சுதந்திரத்திற்காக உன்னால் என்ன செய்யமுடியும்?
என்னவெல்லாம் முடியுமோ? அது அத்தனையும் என்றார் போஸ்..
உனக்கான நபர் ஒருவர் இருக்கிறார்.
சென்று பார் என சி.ஆர்.தாஸிடம் அனுப்பினார் காந்தி.
பார்வர்ட் பத்திரிக்கைக்கு ஆசிரியராக்கினார் தாஸ்..
பத்திரிக்கையின் மூலம்
இளைஞர்களை ஈர்த்தார் போஸ்..
காங்கிரஸ் மாநாடுகளில்
எதிரெதிர் கருத்துக்களை
கொண்டிருந்தனர்
காந்தியும்,தாஸும்..
காந்தியைப் பிடித்திருந்தாலும்
அவரது ஆமாம்சாமி
கொள்கைகள் போஸிக்கு அறவே பிடிக்கவில்லை.
காந்திக்கும், தாஸிக்கும்
கருத்துமோதல் முற்ற
முடிவு பிறந்தது சுயராட்சியக் கட்சியாய்..
இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது
சுயராட்சியக் கட்சி..
ஈர்ப்பிற்கு காரணம்
சுபாஷ் சந்திரபோஸ்..
தெளிவான பேச்சு
துணிவான செயல்
தீவிரமான முன்னெடுப்பு இவைதான்
ஈர்த்தது.
தாஸின் மறைவுக்குப் பின் கட்சி -ஆட்டம் கண்டது.
நாற்காலி சண்டையால்
கட்சி காலியானது..
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வந்தது..
தலைவர் பதவிக்கு
போடியிட்டார் போஸ்.
சீதாராம் பட்டாபி என்பவரை
எதிர்வேட்பாளராய் நிறுத்தினார் காந்தி..
வாக்கெடுப்பின் முடிவில்
போசுக்கு வெற்றி.
இது எனக்குத் தோல்வியென
காந்தி கட்சியிலிருந்து வெளியேற
அவரது விசிறிகளும் வெளியேற..
காந்திக்குப் பிடிக்காத வெற்றியில்
எனக்கு விருப்பமில்லை
பதவி விலகினார் போஸ்..
இவர் விலகியதும்
அவர் சேர்ந்தார்..
இன்றுவரை
புரியவில்லை..
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் வெற்றியைக்கூட
ஏற்கமுடியாத காந்தி
எப்படி அகிம்சையின் அவதாரமானார்?
பரிபூரண சுதந்திரம் எமது குறிக்கோள்..
இடையில்
குடியேற்ற நாடு என்னும் தகுதி வேண்டும்
காங்கிரஸ் கோரியது..
அடிமையாக வைத்திருப்பனிடம்
நாங்கள் அடிமைதான் என்பதற்கு சாசனம் கேட்பது போலல்லவா
இருக்கிறது?
பொங்கினார் போஸ்.
வழக்கம்போல
காந்தியின் வாய்மொழிக்கு வந்தனம் பாடியது காங்கிரஸ்.. ஆனால்
ஆங்கிலேயர் அதைக்கூட தரவில்லை தனிக்கதை..
பரிபூரண சுதந்திரமே
எமது இலக்கு முழங்கியது காங்கிரஸ்.
இதைத்தானே முன்னரே
சொன்னேன் பெருமூச்சுவிட்டார் போஸ்.
பகத்சிங், ராஜகுரு,சுகதேவ் தூக்கிலிடப்பட்டு,
தேசம் கொதித்துக் கொண்டிருந்த சூழலில்
கூடியது காங்கிரஸ் மாநாடு..
ஆங்கிலேயரை எதிர்த்து
கண்டனத் தீர்மானம் கடுமையாய் இருக்கும்,
செயல்பாடுகளில் வேகமிருக்கும் என
கழுகுபோலக் காத்திருந்தார் போஸ்..
பகத்சிங் உள்ளிட்டோரின் செயல்களை ஏற்காவிட்டாலும்
அவர்களின் மரணத்திற்காக வருந்துகிறது.. தீர்மானம் வாசித்து முடித்தது காங்கிரஸ்.
உங்கள் தீர்மானத்தை கிழித்து
எறியுங்கள்.
எரிமலையாய் பொங்கியபடி எழுந்து நின்றார் போஸ்.
தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் என்றார் போஸ்.
வன்முறை என்பது மோசம்தான்- ஆனால்
அடிமைத்தனம் அதைவிட மோசமானது
என முழக்கமிட்டார்.
முடியாது என்று வழக்கம்போல வழிமொழிந்தது காங்கிரஸ்..
காந்தி
அவர் மகாத்மாகவே இருந்துவிட்டு போகவேண்டும்.
ஆனால்
அவர் ஒருவர் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்றால்,
காங்கிரஸ் என்றொரு கட்சி எதற்கு?
அதற்கு தனியே ஒரு தலைவர் எதற்கு?
நொந்தபடி வெளியேறினார் போஸ்.
அரசுக்கு எதிராக சதிசெய்கிறார் போஸ்.
காரணம் சொல்லி கம்பிகளுக்குப் பின்னால் அடைத்தது..
அந்த சமயத்தில்
சிறையில் இருந்தபடியே
வங்கத் தேர்தலில் போட்டியிட்டார்.
மக்களின் மகத்தான ஆதரவில்
சிறையில் இருந்தபடியே
வெற்றிச் சிறகு விரித்தார்.
சிறையில்
உடல்நிலை மோசமடைந்தது.
இந்தியா அதிர்ந்தது..
ஆங்கிலேயர் அச்சப்பட்டனர்..
உயிரைமட்டும் மிச்சம்வைத்து,
விடுதலை செய்தனர்.
போஸின் நிலைகண்டு
மக்கள் மட்டுமல்ல
தலைவர்களும் பதறினர்.
வெளிநாடு சென்றுவிடு போஸ்
உனக்கு நிம்மதியாவது கிடைக்கும் என நண்பர் ஒருவர்
போஸின் மேல்கொண்ட
அக்கறையில் சொன்னார்.
எனக்குக் கிடைக்கும்
என் தேசத்திற்கு எப்பொழுது கிடைக்கும்! சொன்னவரிடம் சொன்னார் போஸ்.
அயர்லாந்தின் விடுதலையும்,
டிவெலாரவின் முழக்கமும்
போஸின் வேகத்தை அதிகரித்தது..
இலட்சத்தில் மக்களைக் கொண்டு,
ஆங்கிலேய தேசத்தின் அருகிலிருக்கும்
அயர்லாந்து
சாதிக்கும்பொழுது,
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்,
கோடிகளில் குழுமியிருக்கும் நம்மால் ஏன் முடியாது?
போஸ் தன் வேகத்தை அதிகப்படுத்தினார்.
ஆங்கிலேயர் அடக்குமுறையை அதிகப்படுத்தினர்.
நாடுகடந்து நாடுகளை ஒன்றிணைத்து,
ஆசாத் ஹிந்து என்னும்
தனி அரசாங்கத்தை சுதந்திர இந்தியாவாக அறிவித்தார்.
அந்த அரசாங்கத்தை
அன்றே ஒன்பது உலகநாடுகள் அங்கீகரித்தன..அதனை
இந்தியத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாதது வேதனை.
சுதந்திர இந்தியாவை
தன்மானத்தோடு மீட்டுத்தரும் முயற்சியில்
போஸ் தோற்று இருக்கலாம்- ஆனால்
இந்தியாவின் கௌரவம்
இன்றளவும் உலகில்
காக்கப்படுகிறதென்றால்
போஸின் பங்கு அதில் பெருமளவு.
அவர் இறுதியாக
காந்திக்கு வானொலிவழி
அனுப்பிய செய்திதான்.
உயிரை உருக்குவதாக இருந்தது.
அதுதான் இது..
மகாத்மா அவர்களே!
நீங்கள்
என்னுடைய தேசபக்தியைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை- ஆனால்
என்னை தயவுசெய்து தேசதுரோகியாக சித்தரித்துவிடாதீர்கள்
என்பதே அது.
இருந்தாரா?
இருக்கின்றாரா?
மறைந்தாரா? என எதுவும்
உறுதியில்லை.
இருப்பினும் இந்தியர் என்ற ஒருவர்
இந்த பூமியில் வாழும்வரை..
அவர் பெயரும்
இப்பூமியில் வாழும்
நெஞ்சை ஆளும்..
உண்மைதான்.
இந்த தேசத்தில்
காந்தி எனப் பெயர்கொண்டவர்களைவிட,
சுபாஷ் எனப் பெயர்கொண்டவர்கள் அதிகம்..
இன்று
நினைவுதினம் அல்ல..
தியாகத்தை,
வீரத்தை,
அர்ப்பணிப்பை,
நினைக்கும் தினம்.
சிகரம் சதிஷ்குமார்
புதுக்கோட்டை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..