தமிழக பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள
அதே போல் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வும் முடிந்தது. இதையடுத்து இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 100 சதவீத மாணவர் தேர்ச்சிக்காக, விடுமுறை நாட்களில் 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
பிளஸ்1 மதிப்பெண்ணுடன் இணைந்த ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நடைமுறை திரும்ப பெறப்பட்டு, பிளஸ்2 மதிப்பெண் மட்டுமே கொண்ட மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..