நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது
மதிப்பெண் சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில்
 இருந்து நீக்கப்பட்ட சேலம் மாணவி ராஜேஸ்வரி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் சேர்க்கப்பட்டார்
*ஆனால் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான அவரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என அவர் தாக்கல் செய்த வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, சான்றிதழ்களை வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தேர்வுத்துறை இயக்குனருக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டது*
*இதை எதிர்த்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது*
*இதை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன், அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அபராதம் விதித்தார்*