*Dr.P.பேட்ரிக் ரெய்மாண்ட்*, cp
*பொதுச்செயலாளர்*
_தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு_
*ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பு
*ஜாக்டோ ஜியோ வின் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம். நடவடிக்கை குறித்த தலைமைச் செயலாளர் அறிவிப்புக்கு பொதுச் செயலாளரின் அறிக்கை*
-----------------------------------
*தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ என்னும் பதாகையின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்*
📌கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி ஈரோட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது, அதன் பிறகு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தலையிட்டதன் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலைமைச் செயலாளர் அவர்கள் நேரில் ஆஜராகி ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரை வல்லுநர்குழுவின் அறிக்கை பெறப்பட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது
📌ஜாக்டோ ஜியோவின் தொடர் போராட்டங்களும் நீதிமன்ற அழுத்தத்தினாலும் ஏழாவது ஊதியக்குழு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
📌 தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளும், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் 21 மாத நிலுவை தொகை பெற்ற பிறகும்கூட தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
📌கடந்தத ஊதிய குழுவில் பெரிதும் பாதிக்கப்பட்ட *இடைநிலை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய பாதிப்புகள் இந்த ஊதிய குழுவிலும் தொடர்கின்றன.*
📌தொகுப்பூதிய பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது குறித்து புதிதாக அமைக்கப்பட உள்ள ஊதிய குழு முடிவு எடுக்கும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார் ஆனால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊதிய குழு தொகுப்பூதிய பணிக்காலத்தை குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
📌 தற்போது ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்டுள்ள திரு.சித்திக I.A.S தலைமையிலான குழுவின் பணிக்காலம் ஜூலை 31 ல் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் மூன்று மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
📌 அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடி வருகிற பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து எனும் கோரிக்கையை ஆய்வு செய்ய கடந்த 26.2. 2016 அன்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி *திருமதி சாந்தா ஷீலா நாயர்* தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர் குழுவின் தலைவர் பதவி இருந்து விலகியபிறகு குழு தலைவர் நியமிக்கப்பட்ட ஆறு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது கடந்த 31 .3 .2018 ல்குழுவின் காலம் முடிந்த பிறகு ஆறு மாதங்கள் கடந்த பிறகும் அந்த குழுவினுடைய நிலை என்ன ஆனது என்று எந்தத் தகவலும் இல்லை.
கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து ஜாக்டோ ஜியோ பலமுறை வட்டார தலைநகரங்கள் மாவட்ட தலைநகரங்களில் மாநில தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மறியல முற்றுகை என பலகட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் இந்த அரசு குறைந்தபட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முன்வரவில்லை.
📌கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை காவல்துறை கொண்டு ஆசிரியர்கள் அரசுஊழியர்களை தேடித் தேடி கைது செய்தது உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 200 பேர் தங்கள் உடல் நலத்தையும் வயதையும் பாராமல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தபோது மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போதும் அது குறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லாத அரசு *சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்* என்று ஆணவத்துடன் கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கைகளை குறித்து எதுவும் பேசாத நிலையில் இப்போது ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு அளித்துள்ள நிலையில் இதுவரை காது கேளாதவராக இருந்த தலைமைச் செயலாளர் *அரசு பணிகள் பாதிக்கப்படுவதால், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு வேலைக்கு வராத கருதப்படவேண்டும், வேலைக்கு வராத நாட்களில் ஊதியம் இல்லை என்றும் விடுப்பு வழங்கும் அலுவலர்கள் விடுப்பு வழங்க கூடாது என்றும் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்*
📌 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தமிழக அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும்,மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அரும்பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சனைகளை அழைத்துப்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும்,மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அரும்பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சனைகளை அழைத்துப் பேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் ஒரு கண்ணியமான அரசின் கடமையாக இருக்க முடியும்.
📌 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அழைத்துப் பேசுவதில் அலட்சியமாக இருப்பதும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதிலும், குழுக்களை நியமித்து கோரிக்கை கிடப்பில் போடுவதுமாக உள்ள தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு *குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இதுபோன்ற எதேச்சதிகார நடவடிக்கைகளை வெளியிடுவது என்பது கண்டிக்கத்தக்கதாகும்*
📌 ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள திட்டமிட்ட வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும். தமிழக அரசு தன்னுடைய ஆணவப் போக்கைக் கைவிட்டு உடனடியாக ஜாக்டோ ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு முடிவு காணப்ப வேண்டும்.
📌 தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும். உடனடியாக தமிழக அரசு நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தெரிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அதுவரை ஜாக்டோ ஜியோ தனது கோரிக்கைகளை பின்வாங்காது.