காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்,பள்ளிகளில் சிறப்பு வகுப்புநடத்த கூடாதென கடந்த மாதம் உத்தரவிட்டார்.
அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் 'காலையில், பள்ளி துவங்கும் முன்பும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக' குறிப்பிட்டிருந்தார்.அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும்என, அறிவுறுத்தினார். இச்சுற்றறிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடா தென, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளும், சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறிசெயல்படும் பள்ளி நிர்வாகத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., அய்யண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'காலாண்டு தேர்வுக்குப் பின், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். விடுமுறை தினங்களில், பள்ளி நிர்வாக பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கல்வித்துறை உத்தரவை மீறி, சீருடையுடனோ, சீருடை அல்லாமலோமாணவர்களை வரவழைப்பது, சிறப்பு வகுப்பு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
Tags
CEO/DEO
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..