அன்னவாசல்,செப்.10: மாணவப் பருவத்தில் கையை சுத்தமாக கையை கழுவக் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் நோய் பரவாத சமூகத்தை உருவாக்க இயலும் என அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநர் த.கண்ணன் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப் பள்ளியில் கைகழுவுதல் குறித்த விளக்கப் பயிற்சி தலைமை ஆசிரியர் ஜெ.சாந்தி தலைமையில் நடைபெற்றது...
கைகழுவுதல் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்த அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநர் த.கண்ணன் மாணவர்களிடம் பேசியதாவது: கை கழுவுதல் என்பது ஒரு சிறிய செயல் தான்.அதை முறையாகச் செய்ய வேண்டும் .இதை முறையாகச் செய்யாததால் தான் பல தொற்று நோய்கள் ஏற்படுகிறது..சாப்பிடுவதற்கு முன்னும் ,பின்னும் ,விளையாடிய பிறகு என எந்தச் செயலைச் செய்த பின்னும் கைகளை முறையாக கழுவ வேண்டும்..வீட்டில் வளர்க்கும் நாய்,பூனை போன்ற செல்லப் பிராணிகளிடம் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கை கழுவாமல் சாப்பிடக் கூடாது..
கை கழுவுதல் என்பது தண்ணீரில் கழுவுவது அல்ல.சோப்பு போட்டு கை கழுவுவது தான் முறையான கை கழுவுதல் ஆகும்.இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்..கைகளை கழுவும் போது அவசரமாக கழுவ கூடாது..கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்..எனவே மாணவராகிய நீங்கள் மாணவ பருவத்தில் கையை சுத்தமாக கழுவக் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் நோய் பரவாத சமூகத்தை உருவாக்க இயலும் என்றார்.பின்னர் மாணவர்களிடம் எப்படி சோப்பு போட்டு முழுமையாக கை கழுவ வேண்டும் என அதன் முறைகள் குறித்து விளக்கினார்..
இறுதில் மாணவர்கள் தினமும் சோப்பு போட்டு கை கழுவும் பழகத்தை கடைப்பிடிப்பேன்.கை கழுவும் முறையை பிறருக்கு சொல்லிக் கொடுப்பேன்.அதோடு கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி அதன் நன்மையைப் புரிய வைப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பயிற்சியில் பெற்றோர்கள், பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்..பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர் கு.முனியசாமி செயதிருந்தார்..
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..