பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.

உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

பழமொழி :

Bitter is patience but sweet is its fruit

பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு

பொன்மொழி:

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்

-விவேகானந்தர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
டாக்கா

2.பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
மானக்‌ஷா

நீதிக்கதை

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்!

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி "முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?" என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.

நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் "உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்?" என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா.

உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7% லிருந்து 9% ஆக உயர்வு: அரசு உத்தரவு

2.தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை..!

3.காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை

4.விளையாட்டிற்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : பிரதமர்  நரேந்திர மோடி

5.விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை