மெர்க்குரி கிரகமான புதன் கோள் குறித்து ஆராய ஐரோப்பிய-ஜப்பானிய கூட்ட விண்வெளித் திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட ஆளில்லாத விண்கலம் இன்று காலை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தை ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் ஜப்பானிய விண்வெளி அமைப்பும் சேர்ந்து இரட்டை விண்கலங்களை அனுப்பி உள்ளன. இந்த இரு விண்கலங்களும் புதன் கிரகத்துக்குப் போய்ச் சேரும் வரை ஒரே விண்கலம் போலச்செல்லும்.
பேபி கொலம்போ என அழைக்கப்படும் இந்த ஆளில்லாத விண்கலம் பிரஞ்சு கயானாவிலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் புதன் கோளில் உள்ள ரகசியங்களை ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய-ஜப்பானிய விண்வெளித் திட்டத்தின்படி, புதன் கிரகத்தின் ரகசியங்கள் மற்றும் புதிர்களை ஆய்வு செய்யவும், புதன் கிரகம் என்பது நீர் போன்ற திரவமாக உள்ளதா அல்லது சாதாரணமாக பூமி போல் உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பாவின் முதலாவது ஆராய்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமாக புதன் கிரகத்துக்கு அதிநவீன விண்கலமொன்று இன்று செலுத்தப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 0145 க்கு தென்னமெரிக்காவில் உள்ள பிரெஞ் கயானாவின் - ஐரோப்பாவின் விண்வெளித் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முதல்த்திட்டத்தின் ஒரு முயற்சியாக 450 செல்சியஸ் மேற்பரப்பு வெப்ப நிலையைக் கொண்டபுதன் கிரகத்தின் மேல் பேபிகொலம்பா (BepiColombo) எனப்படும் இந்த விண்கலம் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.'
இந்த விண்கலம் மணிக்கு 40ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், 7 ஆண்டுகளில் புதன் கிரகம் அமைந்துள்ள 5.2 பில்லியன் மைல் (8.5 பில்லியன்) தூரத்தை கடந்தது தனது இலக்கை அடையும் என அறிவியலாளர்கள் கூறி உள்ளனர்.
இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பேபி கொலம்போ விண்கலம் பூமியிலிருந்து கிளம்பிய பிறகு சூரியனை சுற்றி விட்டு வந்து பூமியை எதிர்ப்புறமாகக் கடந்து செல்லும். இந்த விண்கலம் சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கும் வகையில் விசேஷ பூச்சு பூசப்பட்டுள்ளது. அத்துடன் வெப்பத் தடுப்பு கேடயத்தையும் பெற்றிருக்கும்.
இதற்கு முன்னர் அமெரிக்க நாசா அனுப்பிய மாரினர் 10 விண்கலமும் (1974) மெசஞ்சர விண்கலமும் (2011) புதன் கிரகத்தை ஆராய்ந்து தகவல்களை அனுப்பின.

whats app group1


whats app group 2