விண்வெளியில் இருந்து தற்போது பூமிக்கு வித்தியாசமான சமிக்ஞைகள்
(சிக்னல்) பூமிக்கு கிடைத்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சமிக்ஞைகள்
ஏலியான்களால் உருவாக்கப்பட்டதா என்று ஒரு புறம் சந்தேகம் நீடிக்கின்றது.
இதுகுறித்து
விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஒரு சில
விஞ்ஞானிகளியே அந்த சமிக்ஞை ஏலியன்கள் சிக்னளாக இருக்கும் என்று தெரிவித்து
வருகின்றனர். மற்றொரு விஞ்ஞானிகள் இது ஏலியன்களாக இருக்க முடியுமா என்று
வேறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருக்கின்றனர். ஏலியன் சொன்ன
சொல்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர்.
ஸ்டீபென் ஹாங்கிங்ஸ்:
இந்த பூமிக்கு மேலே ஏலியன்கள் இருப்பது உண்மை.
அவர்கள் பூமியோடு தகவல் கொண்டு வருகின்றனர். பூமிக்கு
ஏலியன்கள் கட்டாயம் வருவார்கள். அவர்கள் மனிதர்களையும் தொடர்பு
கொள்வார்கள். அவர்கள் மனிதர்களை விட அதிக சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்
இதில் சந்தேகம் வேண்டாம். அவர்களால் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.
மனிதர்கள்
வேற்றுகிரக வாசிகள் அகப்பட்டால், அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள
வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். இதை மீறியும் தொடர்பு வைத்துக்
கொண்டால் மனித இனத்திற்கு ஆபத்து என்றும் ஸ்டீபென் ஹாங்கிஸ்
தெரிவித்துள்ளார்.
பூமிக்கு வரும் ஏலியன்கள்: வான்வெளியில்
இருந்து பூமிக்கு ஏராளமான ஏலியன்கள் வருவதாக சில நாடுகளில் வாழ்ந்த மக்கள்
தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அவர்கள் ஒளியை விட பன்மடங்கு வேகமாக
செல்லும் வாகனங்களில் பூமிக்கு வந்து செல்வதகாகவும் மக்கள் தெரிவித்து
இருக்கின்றனர். ஒரு சில இடங்களில் அவர்கள் வந்த சென்றத்திற்கான தடயங்களும்
இருக்கின்றன.
ஏலியன்களின் வாகனம் பறக்கும் தட்டு : ஏலியன்கள்
பூமிக்கும், அவர்கள் பால்வெளி வீதியில் செல்லும் அதிவேக தொழில்நுட்ப
வாகனமாக பறக்கும் தட்டுக்கள் இருக்கின்றன என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
இந்த வாகனம் தட்டை வடிவில் இருக்கும் காற்றை மட்டும் அல்ல, ஒளியை கூட
கிழித்துக் கொண்டு பன்மடங்கு வேகத்தில் செல்லும் என்று பொது மக்கள்
கூறப்படுகின்றது.
மர்மமான ரேடியே அலைகள்: தற்போது
பூமிக்கு மர்மான ரேடியோ அலைகள் வந்து கொண்டிருகின்றன. மேலும் அவகைளை
வானிலாளர்கள் சக்தி வாய்ந்த விரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை
கண்டுபிடித்துள்ளனர். இதற்கு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.
700 MHz சமிக்ஞைகள் அளவு: இதில்
ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின்
அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில்
அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.
நியுத்திரன் நட்சத்திரத்தின் சத்தமா? ஒரு
சில விஞ்ஞானிகள் தற்போது பூமிக்கு கிடைக்கும் சமிக்ஞைகள் நியுத்திரன்
நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர். இதன்படியே வரும்
சந்தம் நட்சத்திரங்களின் சந்தமாகவும் இருக்கலாம் என்று பொது மக்கள்
கருதுகின்றனர்.
ஒரு சில விஞ்ஞானிகள் எதிர் கருத்து: ஆனாலும்
இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு சில விஞ்ஞானிகள் விண்வெளியில்
இருந்து பூமிக்கு ஏலியன்கள் தான் ரேடியோ அலைகள் மூலம் பூமிக்கு தகவல்
அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மனிதர்களுக்கு ஏதோ ஒன்ற சொல்ல
வருகின்றனர் என்றும் தெரிவித்து வருகின்றனர்.