தற்போது வாட்ஸ்-ஆப் கால்களின் வாயிலாக ஹேக்கர்கள் நுழைந்து வருகின்றனர். மேலும் நாம் பயன்படும் ஆப்களையும் அவர்கள் கட்டுப்பாட்டி வைத்துக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் நாம் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் ஆப் கால் வழியாக நுழைந்து திருடவும் முடியும். இதனால் தற்போது அனைத்து பயனர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் :
தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பயன்பாட்டில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்-ஆப். இதை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகின்றது.


 ஆன்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்பாடு : .
இந்த வாட்ஸ் ஆப் ஆப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களில் ஓஎஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


 கால் பேச மேம்பாடு :
முதலில் குறுந்தகவல்கள் மட்டும் பகிரப்பட்டு வந்த தற்போது வரை அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன. இதில் ஒன்றாக கால் பேசும் வசதியும் இருக்கின்றது.


 ஹேக்கர்கள்:
வாட்ஸ் ஆப்பில் கால் பேசும் போது அதன் கணக்கை ஹேக் செய்யும் சம்பவங்களும் நிகழ்வதாக ZDnet and the register என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. முதலில் பேஸ்புக் நிறுவனமும் இதை பெரிதாக காட்டிக் கொள்ளாத நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


 பயனர்கள் அதிர்ச்சி:
இந்த சம்பவம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில்நுட்ப குறைபாட்டை சரிசெய்ய முயற்சியில் இறங்கியது.

 சரிசெய்யப்பட்டுள்ளது:
தற்போது வரை சமீபத்திய குறைபாடு மட்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.