புதுக்கோட்டை,நவ,26-          அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக 2011-2012ஆம் கல்வியாண்டில் அரசாணை 177ன்படி    தமிழகம்
முழுவதும் 16549 தையல்,இசை,கணினி,உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர தொழிற்ஆசிரியர்கள் அரசு நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று 26ந்தேதி(திங்கட்கிழமை)மற்றும் நாளை27ந்தேதி (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அரசால்  அறிவிக்கப்பட்டு  அதன்படி தொடங்கியது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள   தேர்வுக்கூட அரங்கிலும்,புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் இன்று 26ந்தேதி (திங்கட்கிழமை) பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களை சரிபார்க்கும் முறைக்குறித்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் குழு உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இன்று 26-ந்தேதியும்(திங்கட்கிழமை) நாளை27-ந்தேதியும் (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரியும் 451 பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணியில்  பாடவாரியாக உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலரை  உள்ளடிக்கிய 9குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணி நடைபெறுவதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா உத்தரவின்பேரில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் க.குணசேகரன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம் ஆகியோர் மேற்பார்வை செய்துவருகிறார்கள்..

Whats App Group link