பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி ரூ.78 விலையில் 20ஜிபி டேட்டா
சலுகையை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த புதிய பிரீபெயிட் சலுகையை நாடு முழுக்க 20 வட்டாரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்த முடியும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.78 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது, பின்பு இதனுடன் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும் காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்கள் மொபலில் STV COMBO78' என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து நாட்கள் வேலிடிட்டி
மேலும் பத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பிஎஸ்என்எல் (ரூ.78) சலுகையில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80கே.பி-யாக குறைக்கப்படும் என்று
பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.1,699
தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.1,699 சலுகை திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா 4ஜி தரவரிசையில் வழங்கப்படுகின்றது. தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்தியேக ரிங்டோன் பேக் போன்ற அனைத்துச் சேவைகளும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.2,099
தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.2.099 சலுகை திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்தியேக ரிங்டோன் பேக், தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட சேவைகள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.