*மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுக்க, பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த, 'ஷாலாஷித்தி' திட்டம், கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது*
*தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் (நியூபா) சார்பில், திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் (www.shaalasiddhi.nuebha.org) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்யும் பட்சத்தில், நிதியுதவி அளிக்கப்படுகிறது*
*பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தேவையான அனைத்து வகை பயிற்சிகளும், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர, அக்.,31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது*
*கோவையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இந்த இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றியுள்ளன*
*பள்ளியின் பெயர், மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு பணிகள், கால அவகாசம் குறித்து, தெளிவாக குறிப்பிட்டு நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகள் இத்திட்டத்தில் பயனடைவதாக, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் கண்ணன் தெரிவித்தார்*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..