கடந்த 21 வருடங்கலில் முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டருப்பதாவது:

" புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பாடத் திட்டம் மனநலத்தில் கவனம் செலுத்துவது, பொது சுகாதாரம், தகவல் தொடர்பு திறன்கள் உள்ளிட்ட அதிக வகுப்புகளை கொண்டதாக இருக்கும். மேலும் உறுப்பு தானம் குறித்து நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடம் மாணவர்கள் எவ்வாறு எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் மனப்பான்மை, நெறிமுறைகள் மற்றும் தொடர்பியல் குறித்தும் பாடதிட்டத்தில் சேர்க்கப்படும்.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் இருந்தே மருத்துவ மாணவர்களுக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படும். உறுப்பு தானத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் புரியும்படி தெரிவிப்பது குறித்தும் பாடதிட்டங்கள் சேர்க்கப்படும்.

இதுகுறித்த பாடதிட்டங்கள் மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் இடையே ஏற்படும் தவறான புரிதல்கள் தவிர்க்க வழிவகுக்கும்.

மாணவர்கள் மனநல தலைப்புகளில் பல்வேறானவற்றை கற்று அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

இரண்டாம் ஆண்டு முதல் மருத்துவம் குறித்த பாடத்தை மட்டும் மாணவர்கள் கற்பார்கள். முதலாம் ஆண்டில் மனநலம் குறித்து அனைத்தும் கற்றுக்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் இருக்கும்" என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

whats app group1

whats app group 2

whats app group 3