
வாட்ஸ்அப்-பில் தவறுதலாக க அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது போல ஃபேஸ்புக்கிலும் அந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இன்று உலகம் முழுதும் தகவல்தொடர்பு சாதனமாக அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலியைத்தான்.
2014ம் வருடம் ஃபேஸ்புக் வாட்ஸ்அப்பை விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் எழுத்துருக்களை மட்டும் அனுப்ப முடிந்த நிலையில், புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ல முடிந்தது. அதேபோன்று பண பரிமாற்றங்களும் செய்ய முடிந்தது.
அதே போல முன்பு வாட்ஸ் அப்பில் பதிந்த செய்திகளை நீக்க முடியாது. ஆனால் பிறகு அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்.
இந்நிலையில் வாட்ஸ் அப் போலவே ஃபேஸ்புக்கின் மெசேஜ் அப்ளிகேஷனான மெசேஞ்சரிலும் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்படி மெசேஞ்சர் அப் அல்லது ஃபேஸ்புக் மூலம் யாருக்காவது தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால் டெலிட் செய்ய முடியும். ஆனால் 10 நிமிடத்திற்குள் அதை டெலிட் செய்ய வேண்டும்.. பின்னர் பயன்பாட்டாளர்களின் வரவேற்பை பொறுத்து இந்த நேரம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.