ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் ஜீவராசிகளின் நடமாட்டம்
வெளியான புகைப்படத்தில், புகை மூட்டமான உருவமொன்று செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவது போல பதிவாகியுள்ளது.
உண்மையில் இது என்னது?
முதல் பார்வையில், அது ஒரு வெடிப்பு போல் காட்சியளித்தாலும், செவ்வாய் கிரகமானது முற்றிலுமாக மடிந்து போன ஒரு கிரகம் என்பதால், இதை தீவீரமாக ஆராய வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.
ஏனெனில் அறிவியலின் வழியாக தெளிவான விளக்கத்தை கொடுக்காத பட்சத்தில், செவ்வாய் கிரகம் பற்றிய பல புரளிகள் கிளம்ப ஆரம்பிக்கும்.
எப்போது, எதனால் புகைப்படமாக்க பட்டது?
செவ்வாய் கிரகத்தின் ஆர்ஸிய மோன்ஸ் பகுதியின் மேல் சுமார் 1,500 கிலோமீட்டருக்கு நீண்டு கிடைக்கும் இந்த புகை மூட்டமானது, கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முதலில் கண்களை குழப்பியது!
பார்ப்பதற்கு "அப்பட்டமாக" எரிமலை வெடிப்பினால் கிளம்பிய புகை மூட்டம் போன்று தெரியும் இதை ஒரு கண்கட்டி வித்தை என்கின்றனர் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில், செவ்வாய் கிரகத்தில் கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு வெடிப்பு கூட காணப்படவில்லை, பதிவாகவில்லை. எனவே அர்ஸியா மோன்ஸ் பகுதியின் மேலே காணப்படும் புகைமூட்டத்திற்கு காரணம் எரிமலை அல்ல.
வேறு என்னதான் காரணம்?
இந்த விண்வெளி நிகழ்வை, ஓரோகிராபிக் மேகம் என்று வானிலை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவ்வகை மேகங்கள், கீழ்நோக்கிய மலைகளின் பகுதிகளில் காணப்படுகின்றன. மேற்பரப்பிற்கு நெருக்கமான காற்று மேற்பரப்பில் பாய்ந்து, விரிவடைவயுமாம். அது தூசி துகள்கள் மீது ஈரப்பதத்தை அனுமதிக்குமாம், அதன் விளைவாக அங்கு நிலவும் வெப்பநிலை குளிர்விக்கப்பட்டு இவ்வகை மேகங்கள் உருவாகுமாம்.
எப்போது மறையும்?
சுவாரசியம் என்னவெனில், செவ்வாயில் உலாவும் இந்த விசித்திரமான மேக மூட்டமானது, பெரும்பாலும் இந்த ஆண்டு முழுவதும் காட்சியளிக்குமாம். வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்கும் சில மாதங்களுக்கு முன் மறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலும் கூட!
ஒவ்வொரு சில புவி ஆண்டுகளுக்கு இடையிலும், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சரியான பருவகால நிலைமைகளால், நீர் பனிக்கட்டிகள் நிறைந்த மேகங்கள் உருவாக்குவதும், அதை மார்ஸ் எக்ஸ்பிரஸ் புகைப்படத்தில் பதிவு செய்வதும் வழக்கமான ஒன்று தான் என்பதும், கடந்த 2009, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற படங்கள் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் ஏற்பட்டுள்ள ஒரே லாபம்?
ஆக 2018 ஆம் ஆண்டில் இது மீண்டும் பதிவாகியுள்ளது ஒரு ஆச்சரியமான விடயம் அல்ல என்கின்றன ஆராய்ச்சியாளர்கள். மீண்டும் ஒரு முறை தோன்றியுள்ள இந்த மேகமானது, செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் தொங்கும் துகள்களின் அடர்த்தியை அளவிடுவதற்கான வாய்ப்பை விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
தூசி புயலில் சிக்கிய செவ்வாய்!
இந்த ஆண்டு தொடக்கத்தில், செவ்வாய் கிரகமானது ஒரு மாபெரும் தூசி புயலால் தாக்கப்பட்டதும், அந்த நிகழ்வானது செவ்வாய் கிரகத்தில் எவ்வாறு தூசி எழும் என்பதை புரிந்துகொள்ள உதவியதும் குறிப்பிடத்தக்கது.