நடுநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்
மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதில், முறைகேடுகள் இல்லை, சில குறைபாடுகள் உள்ளன. அது, சரிசெய்யப்பட்டு, எந்த தவறுமின்றி, பணி நியமனம் செய்யப்படும்
தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், புதிதாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க, அரசு பரிசீலனை செய்துவருகிறது என்றார்
SOURCE DINAMALAR WEBSITE
Ⓜ🔰🔰டிசம்பருக்குள் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடங்களும் கணினி மயம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகம் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது
மாணவர்கள் யூ டியூப் வழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை, செல்போனில் டவுன்லோட் செய்து படிக்கும் வகையில் மாற்றப்படும்
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவு செயல்படுத்தப்படும்
மாணவர்கள் வருகை மற்றும் வீட்டுக்கு செல்லும் நேரங்களை, பயோமெட்ரிக் முறையில் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அடுத்த ஆண்டு கொண்டு வரும் புதிய பாடத்திட்டத்தின்படி பிளஸ் 2 முடித்த உடனே மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் கொண்டு வரப்படும்
9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பாடத்திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு, இணையதளம் மூலம் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும்
🔶🔶மேலும் வரும் டிசம்பருக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சைக்கிளும், ஜனவரி மாத இறுதிக்குள் பிளஸ்1, பிளஸ் 2வில் உள்ள 11.17 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினா