தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, வரும் ஒன்றாம் தேதி நடப்பதால், மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது
இத்தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வில், 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
வெற்றி பெறுவோருக்குஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிச. 1ம் தேதி தேர்வு நடக்கவுள்ளதாக, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது
கோவை மாவட்டத்தில், 5 ஆயிரத்து 745 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்துமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது