ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏராளமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருகின்றது. இதைப்பற்றி அறிய மனித இனத்திற்கு ஒரு அளவற்ற மகிழ்ச்சி. மேலும், அங்கு நடப்பது பெரும்பாழும் நமக்கு மாயா ஜாலமாகவே தெரியலாம்.
அங்கு இருப்பதை நமக்கு இன்று வரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலாகவே இருக்கின்றது. இந்நிலையில் மெய்ஞானத்திலும் புராணங்களிலும் சொல்லப்படுவது தற்போது ஒரு சிலவற்றை விஞ்ஞானம் உண்மை போல் நிரூபித்து வருகின்றது.
தற்போது ஹங்கேரி நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தற்போது அதிசயம் ஊட்டும் வகையிலும் இருக்கின்றது. இதனால் பொது மக்களும் அதை காண ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு:
பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருக்கலாம் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நீடித்து வந்தது. இதுகுறித்து ஏராளமானோரும் தனது ஆய்வுகளை நடத்தி வந்தனர்.
சிக்கல் நிறைந்த ஆய்வு:
விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களால் இந்த ஆய்வுகள் குறித்து தெளிவான முடிவுகள் எடுப்பதில் விஞ்ஞானிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளையும் ஒரு சில விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இரண்டு நிலவுகள்:
பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இருப்பதை ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர்.
இரண்டு நிலவில் தூசு:
தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு நிலவிலும் தூசுகள் நிறைந்து காணப்படுகின்றது என்று ஹங்கேரி நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவு தூரத்தில் இரண்டு :
பூமியிலிருந்து நிலவு உள்ள தூரத்தில் தான் அந்த இரண்டு நிலவுகளும் இருக்கின்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மங்கலான ஒளி:
புதிய இரண்டு நிலவுகளிலும் மங்கலான ஒளியை வீசி வருகின்றது. இதனால் இதை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
source: gizbot.com