2019 ஜன., 1ம் தேதியன்று, பன்னிரண்டரை வயது
பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இன்று முதல், டிச., 5ம் தேதி மாலை, 5:00 மணி வரை, www.dge.tn.gov.in இணையதளத்தில், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சேவை மையத்தில் நேரில் சென்று, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து கொள்ளலாம்


*விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம், 125 ரூபாய், 'ஆன்லைன்' பதிவு கட்டணம், 50 ரூபாய் என மொத்தம், 175 ரூபாய் பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.முதன்முறையாக தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள், 'ஆன்லைன்' விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்


*ஏற்கனவே, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கனவே, தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் அல்லது சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்


 தனித்தேர்வர்கள், 42 ரூபாய்க்கான, ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.'ஆன்லைன்' மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்


 தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தகவலை, கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்

Whats App Group link