*புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின்
விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது
*தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு பொதுதேர்வு நடத்தப்படுகிறது
*இதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு 1200 மதிப்பெண்களில் இருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது
*இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்கள் குறித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது
*இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது
*2018-19ம் கல்வியாண்டில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளை வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுதேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்
*இதையொட்டி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் வாயிலாக அனுப்ப அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது
*அதில் பள்ளியின் பெயர், பள்ளியின் எண், கல்வி மாவட்டம், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள், அருகில் தேர்வு எழுத உள்ள பள்ளியின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்
*இந்த விவரங்களை சேகரித்து தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் தேர்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை தேர்வுத்துறை இயக்குனர் வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்