மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வு,
மாநிலம் முழுக்க, வரும் 4ம் தேதி நடக்கிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை அளிக்கும் பொருட்டு, தேசிய திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுதுவர். கோவை மாவட்டத்தில், 8 ஆயிரத்து 128 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.



அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து, 80 மதிப்பெண்களும், கணிதத்தில் 20 மதிப்பெண்கள் என, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 400 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உயர்கல்வியில் ஆய்வுப்படிப்பு முடிக்கும் வரை, இந்த உதவித்தொகை தொடர்ச்சியாக வழங்கப்படுவதால், மாணவர்களிடையே அதிக போட்டி நிலவுகிறது.இத்தேர்வுக்கு கல்வி மாவட்டம் வாரியாக, தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நகரின் மையப்பகுதியில், 10 பள்ளிகள், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ஏழு, பேரூரில் ஆறு மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நான்கு என மொத்தம், 27 மையங்களில், தேர்வு நடக்கிறது.தேர்வுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, மையங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தன

whats app group1

whats app group 2

whats app group 3