தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:




தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டியல் இஎம்ஐஎஸ் விபரங்களின் அடிப்படையில் தயாரித்தல் தொடர்பாக பள்ளி மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து கூடுதல் விபரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு நவம்பர் 19 முதல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.



தற்போது டிசம்பர் மாதம் 14ம் தேதி வரைகால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது. இந்த நாட்களுக்குள் பணிகளை முடித்து அனுப்ப வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats App Group link