ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை 17.12.1982-ல் வழங்கியது.
இதை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாள் ஓய்வூதியர் தினமாக நினைவுகூறப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன் படி அனைவரையும் சமமாகப்பாவிக்க வேண்டும் என்றும், 01.04.1979 தேதி முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டின் படி வழங்கப்படுவதைப் போன்றே 31.03.1979-ற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரே விதமாக ஓய்வூதியக் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி தொடுக்கப்பட்ட *“D.S நகரா எதிர் இந்திய அரசு” வழக்கில்* உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான *அரசியல் சாசன அமர்வு,*

⚡ *ஓய்வூதியம்* என்பது ஒரு *உரிமை!*
⚡ அது *கருணைத்தொகை அல்ல.*
⚡ அரசு ஊழியரின் நீண்ட கால மற்றும் திறமையான பணிக்கான *கொடுபடா ஊதியம்.*
⚡ ஓய்வூதியம் என்பது சமூகப் பொருளாதார நீதியின் பொருட்டு வாழ்நாளின் இறுதிப் பகுதியில் *கொடுக்கப்பட வேண்டிய பொருளாதாரப் பாதுகாப்பு.*
⚡ *அரசியல் சட்டப்பிரிவு 41-ன்* படி முதுமை, நோய், இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளைச் செய்து *சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி.*
என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஆனால் இன்றோ ஓய்வூதியம் என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பெயரில் மட்டும் இடம்பெற்ற வெற்றுச் சொல்லாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

_நன்றி : கானலான ஓய்வூதியம்_