தமிழகத்தில் 25 மாணவர்களுக்கும் குறைவாக பயன்பெறும் 8000 சத்துணவு மையங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் 43,205 சத்துணவு மையங்கள் மூலம் 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை தவிர, 31 மாவட்டங்களில் 25 மாணவர்களுக்கு குறைவாக பயன்பெறும் சத்துணவு மையங்களை மூட சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி உத்தரவிட்டுள்ளார். இதன்படி 8000 சத்துணவு மையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.