13 வயதில், இந்தியச் சிறுவன் ஒருவன் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு உரிமையாளராக மாறியுள்ளான். அவனுக்குப் பாராட்டுகள் குவிந்து
வருகிறது.
ஆதித்யன்
துபாயின் டெய்ரா பகுதியில் உள்ள எலைட் பள்ளியின் 7 -ம் வகுப்பு மாணவர் ஆதித்யன் ராஜேஷ். இந்திய வம்வசவாளியைச் சேர்ந்த இவர், 9 வயது இருக்கும் போதே துபாயில் ஏகப் பிரபலம். காரணம், 9 வயது இருக்கும்போதே ஒரு மொபையில் அப்ளிகேஷனை உருவாக்கி அசத்தினார். இதேபோல, தொடர்ந்து லோகோக்கள் மற்றும் இணையதளங்களை வடிவமைத்துவருவதைப் பொழுதுபோக்காகச் செய்துவந்திருக்கிறார். தற்போது 13 வயதாகும் இவர், சாஃப்ட்வேர் கம்பெனி ஓனராக மாறியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், `Trinet Solutions' என்ற கம்பெனியைத்  தொடங்கியுள்ளார். தற்போது, இவரது கம்பெனியில் மூன்று பேர் பணிபுரிகின்றனர்.
ஆதித்யன்
இந்த மூன்று பேருமே, இவரது பள்ளியில் படிக்கும் 11 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பு சிறுவர்கள்தான். இந்தச் சிறு வயதில், `தொழில்நுட்ப மேதை'யாக மாறியுள்ளார். இவர், ஐந்து வயது இருக்கும்போதிலிருந்தே கம்ப்யூட்டர் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'கலீஜ் டைம்ஸ்'க்கு பேட்டியளித்த ஆதித்தியன், ``கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதியில் தான் நான் பிறந்தேன். நான் ஐந்து வயதாக இருக்கும்போது எனது குடும்பம் துபாய்க்குக் குடிபெயர்ந்துவிட்டது. அப்போது, டெக்னாலஜியில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். மென்பொருள், அப்ளிக்கேஷன் டெவலப், சைபர் செக்யூரிட்டி கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன்.
இந்தியச் சிறுவன் ஆதித்யன்
எனக்கு 9 வயது இருக்கும்போது, கூகுள் குரோமுக்கு இணையான பிரௌசராக `ஆசிர்வாத் பிரௌசர்'  உருவாக்கினேன். எனக்கு 18 வயதாகும்போது எனது கம்பெனியை வருமானம் ஈட்டக்கூடிய கம்பெனியாக மாற்றுவேன். தற்போது, எனது பள்ளிக்கு உபயோகப்படும் சில திட்டங்களை இலவசமாகச் செய்துகொடுத்துவருகிறேன்" என்று கூறும் ஆதித்யன், துபாயில் தனது வீட்டின் அருகே பழகுவதற்கு நிறைய நண்பர்கள் இல்லாததால், டெக்னாலஜியில் நிறைய ஆர்வம் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

Whats App Group link