ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு
நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் பட்டியல், அவர்கள் பணியாற்றிய காலம், பொது இடமாறுதலுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது*


 *மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு*


 *ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற வேண்டும். இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்*


 *ஆனால் 2018-19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன*


 *இதனால் பிற மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர்*


 *ஆனால் வெறும் 5 மாதங்கள் மட்டுமே பிற மாவட்டங்களில் பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இட மாறுதல் பெற்றுள்ளனர். பதவி உயர்வையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர்*


 *வெளிப்படையின்றி, லஞ்ச அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்த ஆசிரியர் பொது இடமாறுதல், ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் உள்ளது*


 *லஞ்ச அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் குறித்து நடவடிக்கை கோரி புகார் அளித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை*


 *எனவே, ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்*


 *ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்*


 *இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது*


 *மனுவை விசாரித்த நீதிபதிகள், 2018-19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் பட்டியல், அவர்கள் பணியாற்றிய காலம், இடமாறுதலுக்காக கோரும் காரணம், ஆசிரியர் பொது இடமாறுதலுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்*


Whats App Group link