தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் முறைகளில், பல மாற்றங்களைக் கொண்டு
வந்துள்ளது, தமிழக அரசு. சமச்சீர் கல்வியை, அனைத்துப் பள்ளிகளும்
பின்பற்ற வேண்டும், என்ற கட்டாயமும் உள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் அனைத்தும், பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.


இதனை அடுத்து, தமிழக அரசு, தமிழகத்தில் இயங்கும், அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி, வரும் 2019-ஆம் ஆண்டு, ஜுன் மாதம் முதல், தமிழகத்தில், அரசு துவக்கப் பள்ளிகளே இருக்காது. அனைத்து அரசு துவக்கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளி மற்றும், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்படும்.


இனி, ஒரே பள்ளியல், 1 முதல் பிளஸ் டூ வரை, இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி பயிலலாம்.
இந்த நடைமுறை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது

Whats App Group link