தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் விரையில் நிரந்தரமாக பணி அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் லட்சக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தங்களை நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என்பது இவர்களின் நீண்ட நாள் வேண்டுகோளாகும். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு நிரந்தரமாக பணியமர்த்த ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.