அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை(டிச.4)முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருந்த
நிலையில், நீதிமன்றத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகஜாக்டோ -ஜியோஅமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல், 21 மாத நிலுவைத் தொகையை வழங்குதல்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல்உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் டிசம்பர் 4ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதையடுத்து,போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால்ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.இந்த சூழ்நிலையில்,அவர்களின் போராட்டத்திற்கு தடை கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நிலையில்,ழக்காக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்தது.
அதன்படி இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோ -ஜியோ போராட்டத்தை டிச.10ம் தேதிக்கு ஒத்தி வைக்க முடியுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர்,நீதிமன்றத்தின் கோரிக்கைக்கு ஏற்ப ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே ஜாக்டோ -ஜியோ போராட்டம்தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜாக்டோ -ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து இதுவரை தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? மேலும் தற்போது அரசின் பதில் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுவழக்கு டிசம்பர் 10ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.