பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பங்கேற்கும் தனி தேர்வர்களுக்கு, ஏற்கனவே, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில், பங்கேற்க தவறியவர்கள், நாளை முதல், 14ம் தேதி வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி, செய்முறை பயிற்சி வகுப்புக்கு, பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யும் பள்ளிகளுக்கு சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். மேலும், செய்முறை பயிற்சிக்கு கட்டணம் செலுத்திய ரசீதை, தேர்வு துறை சேவை மையத்தில் சமர்ப்பித்து, நாளை முதல், 14க்குள், தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை, பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது