வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் விவோ நிறுவனமும் ஆஃபர் அறிவித்துள்ளது. ஆம், விவோ ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.10,000 வரையில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என இரு ஆன்லைன் வர்த்தக நிறுவன தளங்களும் கிடைக்கும். இந்த சலுகை Vivo Republic Day Sale என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை, 18 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ ஆஃபர்.
2. விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 18 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ சலுகை. 3. ஹெச்டிஎப்சி வங்கியின் மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது 10% கூடுதல் தள்ளுபடி.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் நாளை முதல் சலுகை துவங்குகிறது. அமேசானில் 23 ஆம் தேதி வரையிலும், பிளிப்கார்ட்டில் 22 ஆம் தேதி வரையிலும் சலுகை இருக்கும். அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதலும், பிளிப்காரட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இன்று காலை 8 மணி முதலே இந்த சலுகை விற்பனை துவங்கியது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..