ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டின் 18 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

350 – ஜெனரல் மக்னென்டியஸ் ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.
1520 – அசுண்டே ஆற்றுக்கருகில் இடம்பெற்ற போரில் டென்மார்க் மற்றும் நோர்வேயின் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடனை வென்றான்.
1535 – லீமா நகரம் நிறுவப்பட்டது.
1591 – சியாம் மன்னன் நரெசுவான் பர்மாவின் இளவரசன் மின்சிட் சிராவுடன் மோதி அவனைக் கொன்றான்.
1670 – ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான்.
1701 – பிரஷ்யாவின் மன்னானாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினான்.
1778 – ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான்.
1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.
1824 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.
1871 – வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னனான்.
1896 – எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.
1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.
1929 – லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.
1969 – ஐக்கிய அமெரிக்காவின் விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
1977 – அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.
1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
2003 – கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.
2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1854 – சுன்னாகம் குமாரசாமிப்புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)
1921 – நாம்பு ஓச்சிரோ, இயற்பியல் அறிஞர்
1937 – ஜோன் ஹியூம், நோபல் பரிசு பெற்றவர்.
1955 – எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அமைச்சர்

இறப்புகள்

1862 – ஜான் டைலர், ஐக்கிய அமெரிக்காவின் 10வது குடியரசுத் தலைவர் (பி. 1790)
1873 – எட்வர்ட் பல்வர்-லிட்டன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1803)
1936 – றூடியார்ட் கிப்லிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1865)
1963 – ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
1995 – அடொல்ஃப் பியூட்டெனண்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர் (பி. 1903)
1996 – என். டி. ராமராவ், தெலுங்கு திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1923)

Whats App Group link