புதுடெல்லி:

2020-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் கள நிலவரம் குறித்து ஆராய, ஐதராபாத் ஐஐடி தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தியா முழுவதும்1.6 லட்சம் இடங்கள் நிரம்பவில்லை. இதனையடுத்து. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து, மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்ற ஏஐசிடிஇ, 2020-21 ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்தது.

எனினும்,இளநிலைப் படிப்புகளில் செயற்கை புலனாய்வு, ரோபோடிக்ஸ், தரவியல் விஞ்ஞானம் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய புதிய படிப்புகளை அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2020-க்கு பின் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை, ஏஐசிடிஇ முடிவு

Whats App Group link