பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், பிஸ்கட், சாம்பு, சாக்லேட் பாக்கெட்டுகளுக்கும் பிளாஸ்டிக் தடையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும், மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க அதிரடியாக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. இதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு தடை விதிக்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி நாம் தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், டீ கப், தண்ணீர் பாக்கெட், ஸ்டிரா, பிளாஸ்டிக் தட்டு உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாற்றாக துணிப்பை, கண்ணாடி டம்ளர், வாழை இலை, தையல் இலை, பனை ஓலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்தலாம் என பொதுமக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வந்துவிட்டாலும், பிஸ்கட், சாம்பு, சாக்லேட் போன்றவற்றையும் பாலித்தீன் பாக்கெட்டுளில் விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பது புற்றி தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

Whats App Group link