வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
ஒன்பதாவது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இதற்கு தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான "1950' இலவச அழைப்பு எண்ணுடன் கூடிய வாக்காளர் அழைப்பு மையத்தை தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது:

இந்த அழைப்பு மையத்தில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கவும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



வருகின்ற தேர்தல்களில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து நம்முடைய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். ஏதாவது திருத்தப் பணிகளை தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளலாம். வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும். தேர்தல் அன்று தனியார் நிறுவனங்கள் கட்டாயம் விடுப்பு தர வேண்டும். ஒசூர் தொகுதி காலியாக உள்ளதாக இதுவரை பேரவை செயலாளரிடம் இருந்து அறிவிப்பு வரவில்லை.


இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்றார் சத்யபிரத சாகு

Whats App Group link