
டிக் - டாக், மியூசிகலி, டப்மாஷ் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதே போல் விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நிகில் பிரஜன் தன்னுடைய நினைவாற்றல் மூலமாக எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான். எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் மழலை மொழியில் அந்த நாட்டின் தலைநகரின் பெயரைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தும் நிகில் பிரஜன் ``வொன்டர் ஃஆப் புக் ரெக்கார்ட்’’ ( Wonder of book record) சாதனைப் படைத்துள்ளான். இது தொடர்பாக நிகில் பிரஜன் அம்மா சில்வியாவிடம் பேசினேன்.
சிறுவன் நிகில் பிரஜன்
``நிகிலுக்கு இப்போது 2 வயது ஆகிறது.196 நாடுகளின் பெயர்களையும் 6 நிமிடத்தில் சொல்லி ஆச்சர்யப்படுத்துவான். நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்கள், மாவட்டங்கள் என எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிடுவான். உலக வரைபடங்கள் மூலமாக ஒன்றரை வயதில் விளையாட்டாகக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம். ஒருமுறை கற்றுக்கொடுப்பதை எப்போதும் கேட்டாலும் சரியாகச் சொல்லிவிடும் நினைவாற்றல் அவனுக்கு இருப்பதை உணர்ந்தோம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..